search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய  வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்
    X

    இந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்

    புல்வமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் முன்னர் இந்திய அதிகாரி விட்ட ஒரே அறையில் மளமளவென ரகசியத்தை கொட்டினான். #oneslap #armymanrattled #MasoodAzhar
    புதுடெல்லி:

    புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான மசூத் அசார் கடந்த 1994-ம் ஆண்டில் போர்சுகல் நாட்டின் போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வங்காளதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்றான்.

    இதை கண்டுபிடித்த இந்திய அதிகாரிகள் காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் மசூத் அசாரை கைது செய்தனர்.

    அப்போது கோட் பால்வால் சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த அவனிடம் பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் அவற்றின் ஆதரவுடன் காஷ்மீரிலும் இந்தியாவின் பிறபகுதிகளிலும் ரகசியமாக செயல்படும் அமைப்புகள் தொடர்பாக ராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் விசாரித்து வந்தனர்.

    ஆரம்பத்தில் உண்மையை சொல்ல சற்று முரண்டுப்பிடித்த மசூத் அசார், ஒரு ராணுவ அதிகாரி அவனை ஓங்கி ஒரேமுறை விட்ட ஒரு அறைக்கு பின்னர் அவனிடமிருந்து வாக்குமூலம் பெறுவது அவ்வளவு கடினமாக இல்லை என சிக்கிம் மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. அவினாஷ் மொஹானனே என்பவர் தற்போது தெரிவித்துள்ளார்.



    இதற்கிடையில், நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லி வந்த பயணிகள் விமானத்தை ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் நகருக்கு கடத்திசென்ற பயங்கரவாதிகள், அதில் இருந்த பயணிகளை விடுதலை செய்ய வேண்டுமானால் காஷ்மீர் சிறையில் இருக்கும் மசூத் அசாரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.

    பயணிகளை உயிரை காப்பாற்றுவதற்காக அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 31-12-1994 அன்று மசூத் அசாரை விடுதலை செய்தது.

    பயங்ரவாதிகளின் நிபந்தனைக்கு அடிபணிந்த மத்திய அரசின் சார்பில் அந்நாள் வெளியுறவுத்துறை மந்திரி பயங்கரவாதிகள் மசூத் அசார், ஒமர் ஷேக், முஸ்தாக் அஹமத் ஸர்கார் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்து தனிவிமானம் மூலம் கந்தஹாருக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்து விட்டு, கடத்தப்பட்ட விமான பயணிகளை மீட்டு அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதன் பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மாறிமாறி வசித்துவரும் மசூத் அசார் தற்போது பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அந்நாட்டின் உளவுத்துறை மற்றும் ராணுவத்தின் பாதுகாப்பில் சகலவசதிகளுடன் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. #oneslap #armymanrattled #MasoodAzhar 
    Next Story
    ×