search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தவரின் உடலை தோளில்  சுமந்த ராஜ்நாத் சிங்
    X

    புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தவரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நாத் சிங்

    காஷ்மீர் மாநிலத்துக்கு இன்று பிற்பகல் வந்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் புல்வாமா தாக்குதலில் நேற்று மரணம் அடைந்த வீரரின் உடலை தோளில் சுமந்து சென்றார். #RajnathSingh #CRPFsoldier #PulwamaAttack
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வாகனத்தின்மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

    காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை மந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர்.

    பின்னர்,  மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தனிவிமானம் மூலம் இன்று பிற்பகல் ஜம்மு நகரை வந்தடைந்தார்.

    நேற்றைய தாக்குதலில் உயிரிழந்த 40 வீரர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் பட்காம் பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இறுதி மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தன.



    அங்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், காஷ்மீர் கவர்னர் சத்யபால் சிங் ஆகியோர் அங்கு சென்று வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது அங்கு கூடியிருந்த வீரர்கள் ‘வீர் ஜவான் - அமர் ரஹே’ (உங்களது வீரமும் தியாகமும் அமரத்துவமாக வாழும்) என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டனர்.

    பின்னர் ராஜ்நாத் சிங், மத்திய பாதுகாப்பு படையின் ஜம்மு-காஷ்மீர் மாநில டி.ஜி.பி. தில்பாக் சிங் ஆகியோர் மரணம் அடைந்த வீரரின் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை தோளில் சுமந்தபடி நடந்துசென்று வாகனத்தில் ஏற்றி வைத்தனர். #RajnathSingh #Rajnathlendshoulder #CRPFsoldier #PulwamaAttack
    Next Story
    ×