search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால் ‘பத்மபூ‌ஷன்’ விருதை திருப்பி அளிப்பேன்- அன்னா ஹசாரே மிரட்டல்
    X

    வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால் ‘பத்மபூ‌ஷன்’ விருதை திருப்பி அளிப்பேன்- அன்னா ஹசாரே மிரட்டல்

    வாக்குறுதியை இன்னும் சில நாட்களில் நிறைவேற்ற தவறினால் எனக்கு வழங்கப்பட்ட பத்மபூ‌ஷன் விருதை திருப்பி அனுப்புவேன் என்று அன்னா ஹசாரே மிரட்டல் விடுத்துள்ளார். #AnnaHazare #bjp #PadmaBhushanaward

    மும்பை:

    சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மராட்டிய மாநிலம் அகமத் நகரில் உள்ள தனது சொந்த கிராமமான ரலேக்கான் சித்தியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    லோக்பால், லோக் ஆயுக்தாவுக்கு நீதிபதிகள் நியமிக்க கோரியும், மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க கோரியும் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

    போராட்டத்தின் போது அன்னா ஹசாரே பேசியதாவது:-

    எனது உயிருக்கு எதுவும் நடந்தால் அதற்கு பிரதமர் மோடி தான் பொறுப்பு. மோடி அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து இருந்தது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    இன்னும் சில நாட்களில் இதை நிறைவேற்ற தவறினால் எனக்கு வழங்கப்பட்ட பத்மபூ‌ஷன் விருதை திருப்பி அனுப்புவேன்.

    நான் விருதுக்காக பணியாற்றுபவன் அல்ல. நாட்டுக்காகவும் நாட்டு நலனுக்காகவும் பணியாற்றுவதற்காக எனக்கு இந்த விருது கொடுக்கப்பட்டது. மோடி அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது.


    இவ்வாறு அவர் பேசினார்.

    அன்னா ஹசாரே போராட்டத்துக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்துள்ளது. #AnnaHazare #bjp #PadmaBhushanaward 

    Next Story
    ×