search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு- பட்ஜெட்டில் தகவல்
    X

    பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு- பட்ஜெட்டில் தகவல்

    பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Budget2019 #Demonetisation
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    பணமதிப்புநீக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் ரூ.1.30 லட்சம் கோடி கருப்புப்பணம் கண்டறியப்பட்டுள்ளது. அதில், 50 ஆயிரம் கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.6,900 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.



    பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்ட ரூ.1,600 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. பண மதிப்பிழப்பு முறையால் 3.38 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டறிப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. 2030-க்குள் பல்வேறு இலக்குகளை இந்தியா அடையும்.  5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.5 லட்சம் கோடி மதிப்பிற்கு உயரும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #Budget2019 #Demonetisation
    Next Story
    ×