search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்- மத்திய பட்ஜெட்டில்  அறிவிப்பு
    X

    அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்- மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

    அமைப்புசாரா தொழிலாளர்கள், மாதம் 100 ரூபாய் பிரிமியம் செலுத்தி, 60 வயதுக்குப்பிறகு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் பெறும் புதிய திட்டம், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. #Budget2019 #BudgetSession #PensionScheme
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் இன்று இடைக்கால மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி பொறுப்பு வகிக்கும் பியூஷ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-



    பால் உற்பத்தியை அதிகரிக்க காமதேனு என்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கிசான் கார்டுதாரர்களுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும்.  மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துறை உருவாக்கப்படும். விவசாயிகளுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும்.

    தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பு 10%லிருந்து 14%ஆக உயர்த்தப்படும். 4 ஆண்டுகளில் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதாக தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு கூறியுள்ளது.  பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும்.

    பிரதம மந்திரி ஷ்ராம் யோகி மந்தன் என்ற பெயரில் மெகா பென்சன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மாதம் 100  ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்மூலம் 10 கோடி பேர் பயன்பெறுவர். அமைப்பு சாரா தொழிலாளர்கள், 60 வயதுக்குப் பிறகு மாத ஓய்வூதியமாக குறைந்தபட்சம் ரூ.3000 பெறுவார்கள். இதேபோல், பி.எஃப் சந்தாதாரர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரண நிதி ரூ.6 லட்சமாக உயர்த்தப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. #Budget2019 #BudgetSession #PensionScheme
    Next Story
    ×