search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்துடன், மராட்டிய சட்டமன்றத்துக்கு தேர்தலா?: தேவேந்திர பட்னாவிஸ் பதில்
    X

    பாராளுமன்றத்துடன், மராட்டிய சட்டமன்றத்துக்கு தேர்தலா?: தேவேந்திர பட்னாவிஸ் பதில்

    பாராளுமன்றத்துடன், மராட்டிய சட்டமன்றத்துக்கு தேர்தல் நடக்க உள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறிய கருத்துக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதில் அளித்துள்ளார். #DevendraFadnavis #BJP
    மும்பை :

    மராட்டியத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடக்க உள்ளது. மராட்டிய சட்டசபையின் பதவிகாலம் இந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அக்டோபரில் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து மராட்டிய சட்டசபை தேர்தலையும் நடத்த பா.ஜனதா ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளியாகின.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மும்பை பிரிவு தலைவர் சஞ்சய் நிருபம் வெளியிட்ட தகவலால் இதுகுறித்த சர்ச்சை எழுந்துள்ளது.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    சிவசேனாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது பாராளுமன்ற தேர்தலில் முதலில் கூட்டணி அமைக்கலாம், பின்னர் சட்டசபை தேர்தல் குறித்து முடிவு செய்யலாம் என பா.ஜனதா கூறியது.

    ஆனால் சிவசேனா இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு தேர்தல்களிலும் கூட்டணி அமைக்கவேண்டும் என்று கோரியுள்ளது. மேலும் ஒரே நேரத்தில் 2 தேர்தல்களையும் சந்திக்கவும் சிவசேனா தயக்கம் காட்டவில்லை.

    எனவே சிவசேனாவுடன் கூட்டணியாக ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்ற பா.ஜனதாவின் மேலிட தலைவர்களின் திட்டத்திற்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தயக்கத்துடன் ஒப்புக்கொண்டார் என்பதை நாங்கள் அறிவோம்.

    எனவே இதுகுறித்து நாங்கள் எங்கள் கட்சி கூட்டத்தில் விவாதித்தோம். நாங்கள் முன்கூட்டியே சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் செய்தி தொடர்பாளர் மனிஷா கயாந்தே கூறுகையில், “ சஞ்சய் நிருபத்தின் குற்றச்சாட்டுகள் அபத்தமாக உள்ளது. நாங்கள் கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேயின் உத்தரவு படியே செயல்படுகிறோம். சஞ்சய் நிருபத்தின் குற்றச்சாட்டுகளின் படி அல்ல. அவர் எங்கள் கட்சி குறித்து பேசுவதை நிறுத்திவிட்டு அவரது கட்சியில் நிலவும் பிரச்சினைகளை பார்க்கவேண்டும். ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்கள் நடந்தாலும் அதை எதிர்கொள்ள சிவசேனா தயாராக உள்ளது” என்றார்.

    இதுகுறித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் கேட்டபோது, “சட்டசபை தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு எந்த திட்டமும் இல்லை. எனவே ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களையும் நடத்த எந்த வாய்ப்பும் இல்லை” என்றார். #DevendraFadnavis #BJP
    Next Story
    ×