search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு ராகுல் காந்தி கடிதம்
    X

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு ராகுல் காந்தி கடிதம்

    தன்னை சந்தித்ததை மலிவான விளம்பரத்துக்கு பயன்படுத்துவதா என கேள்வி எழுப்பிய கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கருக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். #Parrikar #RahulGandhi
    புதுடெல்லி:

    சமீபத்தில் ராகுல் காந்தி தனது தாயார் சோனியா காந்தியுடன் தனிப்பட்ட பயணமாக ஓய்வுக்காக கோவா சென்றிருந்தார்.

    ரபேல் ஒப்பந்தத்தின்போது ராணுவ மந்திரியாக முன்னர் பொறுப்பு வகித்து தற்போது கோவா முதல் மந்திரியாக பதவி வகிக்கும் மனோகர் பாரிக்கர் தற்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். கோவா சென்றிருந்த ராகுல் காந்தி நேற்று திடீரென்று மனோகர் பரிக்கரை சந்தித்து நலம் விசாரித்தார்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘ரபேல் போர் விமானம் கொள்முதல் செய்வது தொடர்பான புதிய ஒப்பந்தத்தில் தனக்கு எந்த பங்கும் இல்லை. அனில் அம்பானிக்கு ஆதாயம் தேடித்தரும் வகையில் எல்லாவற்றையும் பிரதமர் மோடிதான் நடத்தினார் என்று முன்னாள் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் தெளிவாக தெரிவித்து விட்டார்’ என்று கூறினார். ராகுலின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.



    இதற்கிடையே, ரபேல் விவகாரம் தொடர்பாக மனோகர் பாரிக்கர் தன்னிடம் தெளிவான விளக்கம் அளித்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து மனோகர் பாரிக்கர் கடிதம் எழுதியுள்ளார்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மனோகர் பாரிக்கருக்கு  கடிதம் எழுதியுள்ளார். அதில்,  உங்களை சந்தித்து பேசியது தொடர்பான எந்த தகவலையும் நான் பகிர்ந்து கொள்ளவில்லை.  சந்திப்புக்கு பிறகான உங்களது அழுத்தம் எனக்கு நன்கு புரிகிறது என தெரிவித்துள்ளார். #Parrikar #RahulGandhi
    Next Story
    ×