search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்சி,எஸ்டி சட்டத்திருத்தத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு
    X

    எஸ்சி,எஸ்டி சட்டத்திருத்தத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு

    எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்திருத்தத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுத்துள்ளது. #SCSTAct #SC
    புதுடெல்லி:

    எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது.

    வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில், இந்த தீர்ப்பு அமைந்திருந்ததாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், கடும் அழுத்தத்துக்குள்ளான மத்திய அரசு, அண்மையில் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றியது. அதன்படி, இந்த சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன்ஜாமீன் பெற முடியாது.


     
    இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அதேசமயம் உச்ச நீதிமன்ற  தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி, அரசு சார்பில் சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் சட்டத் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த 25-ம் தேதி இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அப்போது, விரைவில் அனைத்து மனுக்களும் ஒன்றாக சேர்த்து தனி அமர்வில் விசாரிப்பதற்கு பட்டியலிடப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், மனுதாரர்களில் ஒருவர் தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், எஸ்சி,எஸ்டி சட்டத்திருத்தத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால், தடை விதிக்க மீண்டும் நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

    மேலும், மத்திய அரசின் சீராய்வு மனு உள்ளிட்ட அனைத்து வழக்குகளும் வரும் பிப்ரவரி 19-ம் தேதி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். #SCSTAct #SC
     
    Next Story
    ×