search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்காலிக கண்டக்டர்கள் நீக்கம்- கேரள சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு
    X

    தற்காலிக கண்டக்டர்கள் நீக்கம்- கேரள சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு

    தற்காலிக கண்டக்டர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, கேரள சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். #KeralaAssembly #UDFWalkout
    திருவனந்தபுரம்:

    கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள கண்டக்டர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆனால், தற்காலிக கண்டக்டர்கள் பணியில் இருந்ததால் உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், தேர்ந்தெடுக்கப்பட்ட கண்டக்டர்களுக்கு உடனடியாக பணி வழங்கும்படி உத்தரவிட்டது. இதனையடுத்து, 3861 தற்காலிக கண்டக்டர்கள் சமீபத்தில் நீக்கப்பட்டனர். இந்த வழக்கை மாநில அரசு சரியாக அணுகவில்லை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.


    இந்த விவகாரம் இன்று சட்டமன்றத்தில் எதிரொலித்தது. தற்காலிக கண்டக்டர்கள் பணிநீக்கம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வலியுறுத்தியது. தற்காலிக கண்டக்டர்களை பணிநீக்கம் செய்வதற்கு இடதுசாரி அரசாங்கம் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றும், சட்டங்களை மீறியதாகவும் ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டினர்.

    ஆனால், எதிர்க்கட்சிகளின் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை சபாநாயகர் நிராகரித்தார். இதனையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். #KeralaAssembly #UDFWalkout
    Next Story
    ×