search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகை இஷா கோபிகர் பா.ஜ.க.வில் சேர்ந்தார்
    X

    நடிகை இஷா கோபிகர் பா.ஜ.க.வில் சேர்ந்தார்

    என் சுவாசக் காற்றே, நெஞ்சினிலே உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள இஷா கோபிகர் மத்திய மந்திரி நிதின் கட்காரி முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். #IshaKoppikar #BharatiyaJanataParty #IshaKoppikarjoinsBJP
    மும்பை:

    இந்தியில் மிகவும் பிரபலமான நடிகை என பெயரெடுத்த இஷா கோபிகர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் அதிகமாக நடித்துள்ளார்.

    தமிழில் அரவிந்த்சாமி ஜோடியாக ‘என் சுவாசக் காற்றே’ படத்திலும், விஜய் ஜோடியாக ‘நெஞ்சினிலே’ படத்திலும் நடித்துள்ள இஷா கோபிகர், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ‘எஸ்.கே.14’ படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில், மகாராஷ்டிரம் மாநிலத்தில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி முன்னிலையில் இன்று இஷா கோபிகர்(42) பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். #IshaKoppikar #BharatiyaJanataParty #IshaKoppikarjoinsBJP 
    Next Story
    ×