search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூஜ்யத்துடன் பூஜ்யம் இணைந்தால் ஒன்றும் மாறிவிடாது - பிரியங்கா பற்றி யோகி ஆதித்யநாத் கருத்து
    X

    பூஜ்யத்துடன் பூஜ்யம் இணைந்தால் ஒன்றும் மாறிவிடாது - பிரியங்கா பற்றி யோகி ஆதித்யநாத் கருத்து

    பிரியங்கா காந்தி தீவிர அரசியலுக்குள் நுழைந்துள்ளது தொடர்பாக விமர்சித்த உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பூஜ்யத்துடன் இன்னொரு பூஜ்யம் சேர்ந்தாலும் பூஜ்யம்தான் வரும் என தெரிவித்துள்ளார். #PriyankaGandhi #YogiAdiyanath
    லக்னோ:

    காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி, அக்கட்சியின் உத்தரப்பிரதேசம் மாநிலம் (கிழக்கு) பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நேரடி அரசியலுக்கு வந்துள்ள பிரியங்காவை வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இப்போதே அழைப்பு விடுக்கத் தொடங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து பிரியங்காவை எந்த தொகுதியில் களம் இறக்கலாம் என்ற ஆலோசனை நடந்து வருகிறது. அனேகமாக, தாயார் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடக் கூடும் என தெரிகிறது. 



    இதுகுறித்து கருத்து தெரிவித்த உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், பிரியங்கா ஒன்றும் முதல் முறையாக தீவிர அரசியலுக்குள் நுழையவில்லை. கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போதும், உ.பி. சட்டசபை தேர்தலின் போதும் பிரியங்கா காந்தி காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்துள்ளார். அக்கட்சியின் துரதிருஷ்டம் அப்போது ஆரம்பித்தது. இப்போதும் அதே நிலைதான் ஏற்படும்.

    பூஜ்யத்துடன் பூஜ்யம் சேர்ந்தால் ஒன்றும் மாறிவிடாது. பூஜ்யம் பூஜ்யம்தான். காங்கிரஸ் ஒரு பெரிய பூஜ்யம், அதில் யார் இணைந்தாலும், அதுவும் பூஜ்யம்தான் என தெரிவித்துள்ளார். #PriyankaGandhi #YogiAdiyanath
    Next Story
    ×