search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் தோல்வியை காங்கிரஸ் ஒப்புக்கொள்கிறது - பாரதீய ஜனதா கருத்து
    X

    ராகுல் தோல்வியை காங்கிரஸ் ஒப்புக்கொள்கிறது - பாரதீய ஜனதா கருத்து

    பிரியங்கா நேரடி அரசியலில் குதித்ததால் ராகுல் காந்தி தோல்வியை காங்கிரஸ் பகிரங்கமாக அறிவித்துள்ளது என பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார். #BJPLeader #SambitPatra #RagulGandhi #PriyankaGandhi
    புதுடெல்லி:

    பிரியங்கா நேரடி அரசியலில் குதித்தார். அவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாரதீய ஜனதா கட்சி கருத்து தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், “காங்கிரஸ் கட்சியின் மெகா கூட்டணி என்ற திட்டத்தை பல்வேறு கட்சிகளும் நிராகரித்து விட்டன. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குடும்ப கூட்டணி அமைத்துள்ளார்” என குறிப்பிட்டார்.



    மேலும், “ராகுல் காந்தி தோல்வி அடைந்து விட்டார், குடும்பத்தில் இருந்து ஒரு ஊன்றுகோல் தேவை என்று காங்கிரஸ் கட்சி அடிப்படையில், பகிரங்கமாக அறிவித்துள்ளது” எனவும் குறிப்பிட்டார்.அத்துடன், “பாராளுமன்ற தேர்தல், பரம்பரை அரசியலுக்கும், மக்களுக்காக உழைக்கிறவர்களுக்கும் இடையேயான மோதலாக அமையும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது புதிய இந்தியாவின் கேள்வியாக உள்ளது. எல்லா நியமனங்களும் ஒரே குடும்பத்துக்குள் அமைந்துள்ளது. இதுதான் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதாவுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம். காங்கிரசில் குடும்பம்தான் கட்சி. பாரதீய ஜனதாவில் கட்சியே குடும்பம்” எனவும் கூறினார். #BJPLeader #SambitPatra #RagulGandhi #PriyankaGandhi
    Next Story
    ×