search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் சீர்திருத்தம் - எதிர்க்கட்சிகள் சார்பில் 4 பேர் குழு அமைப்பு
    X

    தேர்தல் சீர்திருத்தம் - எதிர்க்கட்சிகள் சார்பில் 4 பேர் குழு அமைப்பு

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தம் தொடர்பாக பரிந்துரைக்க எதிர்க்கட்சிகள் சார்பில் 4 பேர் கொண்ட குழுவை மம்தா பானர்ஜி அமைத்துள்ளார். #fourmembercommittee #electoralreforms #EC #LokSabha
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் இன்று மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், நாடு முழுவதிலும் இருந்து 22 முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினர்.
     
    இந்த கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசியதாவது:-

    'உண்மையை சொல்லப் போனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல்லாமே திருட்டு இயந்திரங்கள். உலகில் தற்போது எந்த நாட்டு தேர்தல்களிலும் புழக்கத்தில் இல்லாத இந்த திருட்டு இயந்திரங்களை நமது நாட்டில் இருந்தும் ஒழிக்க வேண்டும்.



    இதுதொடர்பாக, எதிர்க்கட்சி தலைவர்கள் ஜனாதிபதி மற்றும் தலைமை தேர்தல் ஆணையாளரை அணுக வேண்டும். மின்னணு இயந்திர வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வெளிப்படைத்தன்மை கொண்ட வாக்குச்சீட்டு முறையில் இனி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதே கருத்த ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்களும் இந்த கூட்டத்தில் பேசுகையில் வலியுறுத்தினர்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைகளில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைப்பதற்காக எதிர்க்கட்சிகள் சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி  இன்று மாலை குறிப்பிட்டார்.

    இந்த குழுவில் காங்கிரஸ் கட்சி சார்பில் அபிஷேக் மனு சிங்வி, சமாஜ்வாடி கட்சி சார்பில் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் சதீஷ் மிஷ்ரா, ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். #fourmembercommittee #electoralreforms #EC #LokSabha #LokSabhapolls
    Next Story
    ×