search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய சினிமா தேசிய அருங்காட்சியகம் - மும்பையில் மோடி திறந்து வைத்தார்
    X

    இந்திய சினிமா தேசிய அருங்காட்சியகம் - மும்பையில் மோடி திறந்து வைத்தார்

    மும்பையில் 140 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்திய சினிமா தேசிய அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். #NationalMuseum #IndianCinema #IndianCinemaNationalMuseum
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் உள்ள 19-ம் நூற்றாண்டு காலத்து அரண்மனையான குல்ஷன் மஹாலில் இந்திய தேசிய சினிமா தொடர்பானஅருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த அருங்காட்சியகத்தில் நூறாண்டுகளை கடந்து வந்த இந்திய சினிமா தொடர்பான வரலாற்று புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

    140 கோடியே 61லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைத்து பார்வையிட்டார். 

    இவ்விழாவில் மத்திய தவவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங், மத்திய சென்சார் வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி, பாலிவுட் நடிகர்கள் ஜீத்தேந்திரா, ரந்திர் கபூர், அமிர் கான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே உள்பட பல மாநிலங்களை சேர்ந்த ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்றனர்.

    அவர்களிடையே பேசிய பிரதமர் மோடி, திரைப்படங்களும், இந்த சமூகமும் ஒன்றையொன்று பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார்.

    முன்னர், இந்தியாவின் வறுமை மற்றும் இயலாமையை நாம் திரைப்படங்களை நாம் பார்த்து வந்தோம். ஆனால், பல லட்சம் பிரச்சனைகள் இருந்தாலும் பிரச்சனைகள் இருக்கும் இடத்தில் அதற்கான தீர்வும் உள்ளது என்பதை பிரதிபலிக்கும் திரைப்படங்களை நாம் தற்போது பார்த்து வருகிறோம் என்று குறிப்பிட்டார். #NationalMuseum #IndianCinema #IndianCinemaNationalMuseum 
    Next Story
    ×