search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எல்.ஏ.க்களை இழுக்க முடியாததால் பாஜகவுக்கு தலைகுனிவு: தினேஷ் குண்டுராவ்
    X

    எம்.எல்.ஏ.க்களை இழுக்க முடியாததால் பாஜகவுக்கு தலைகுனிவு: தினேஷ் குண்டுராவ்

    3-வது முறையும் ஆபரேஷன் தாமரை தோல்வியில் முடிந்துள்ளது. எம்.எல்.ஏ.க்களை இழுக்க முடியாததால் பா.ஜனதாவுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். #DineshGundurao #Congress
    பெங்களூரு :

    பெங்களூருவில் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க கடந்த 6 மாதங்களாக பா.ஜனதாவினர் முயற்சித்து வருகின்றனர். ஆபரேஷன் தாமரை மூலம் எம்.எல்.ஏ.க்களை இழுக்க ஏற்கனவே 2 முறை பா.ஜனதாவினர் முயற்சித்தனர். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. தற்போது 3-வது முறையாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, மாநில தலைவர் எடியூரப்பா உள்ளிட்டோர் எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சித்தனர். அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.

    இது பா.ஜனதாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள். சில எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பது உண்மை தான். அவர்களை சமாதானப்படு்த்தும் முயற்சிகள் நடந்து வருகிறது. கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை. 5 ஆண்டுகளையும் கூட்டணி ஆட்சி நிறைவு செய்யும். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் பா.ஜனதாவின் கனவு ஒரு போதும் நிறைவேறாது.



    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டது பகிரங்கமாகி உள்ளது. அதற்கான ஆதாரங்களை வெளியிடுவோம். வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. அரசியலமைப்புக்கு எதிராக பா.ஜனதா நடக்கிறது.

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் இழுக்க பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா முயற்சி செய்து வருகின்றனர். அவர்களது முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது.

    இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார். #DineshGundurao #Congress
    Next Story
    ×