search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிராமிய மண்வாசனையுடன் சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடும் சந்திரபாபு நாயுடு
    X

    கிராமிய மண்வாசனையுடன் சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடும் சந்திரபாபு நாயுடு

    பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட சந்திரபாபு நாயுடு தன்னுடைய சொந்த ஊரான நாராவாரிப்பள்ளிக்கு இன்று வருகிறார். #Pongal2019 #ChandrababuNaidu
    திருமலை:

    ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு ஒவ்வொரு ஆண்டும் தனது சொந்த ஊரான சந்திரகிரியை அடுத்த நாராவாரிப்பள்ளியில் பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாட அவர், தன்னுடைய சொந்த ஊரான நாராவாரிப்பள்ளிக்கு இன்று வருகிறார். அங்குள்ள அவரின் வீட்டில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார்.

    நாளை (செவ்வாய்க்கிழமை) காலை சொந்த ஊரில் கிராம மக்களுடனும், உறவினர்களுடனும் சேர்ந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்.

    பின்னர் தொண்டவாடா-பீளேர் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதையடுத்து அங்கிருந்து மாலை 4 மணியளவில் புறப்பட்டு ரேனிகுண்டா வந்து, அங்கிருந்து தனி விமானத்தில் கண்ணவரம் செல்கிறார்.

    சந்திரபாபுநாயுடு சொந்த ஊருக்கு வருவதையொட்டி அரசியல் கட்சி பிரமுகர்கள், கிராம மக்கள் நாராவாரிப்பள்ளியில் வழி நெடுகிலும் வாழை மரங்கள், தோரணங்கள், அலங்கார வளைவுகளை கட்டி உள்ளனர்.

    பொங்கல் பண்டிகை கொண்டாட நாராவாரிப்பள்ளிக்கு வரும் பொதுமக்களுக்கும், உறவினர்களுக்கும் உணவு, குடிநீர் வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சந்திரபாபுநாயுடு சொந்த ஊரில் பொதுமக்களிடம் குறைகள் குறித்த மனுக்களை வாங்குகிறார்.  #Pongal2019 #ChandrababuNaidu
    Next Story
    ×