search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல் - ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நியமனம்
    X

    பாராளுமன்ற தேர்தல் - ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நியமனம்

    வரவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, விளம்பர குழு உள்ளிட்ட 17 வகை குழுக்களை பாஜக தலைமை இன்று நியமனம் செய்துள்ளது. #ParlimentElection #BJP #ManifestoCommittee #RajnathSingh
    புதுடெல்லி:

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக ஆட்சியின் காலம் முடிவடைய உள்ளதால், இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தேர்தல் வேலைகளில் மும்முரமாக
    ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, விளம்பர குழு உள்ளிட்ட 17 வகையான குழுக்களின் பொறுப்பாளர்களை பாஜக தலைமை இன்று நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  



    அதன்படி, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், விளம்பர குழுவிற்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதேபோல், மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ், பிரகாஷ் ஜாவேத்கர் உள்பட பலர் பல்வேறு குழுக்களுக்கு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. #ParlimentElection #BJP #ManifestoCommittee #RajnathSingh
    Next Story
    ×