search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பாஜக மதிக்கவில்லை: சித்தராமையா
    X

    சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பாஜக மதிக்கவில்லை: சித்தராமையா

    சபரிமலை கோவில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பா.ஜனதா மதிக்கவில்லை என்று கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார். #BJP #Siddaramaiah
    உப்பள்ளி :

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையா உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சியில் எல்லா முடிவுகளையும் கட்சி மேலிடம் எடுக்கிறது. இதில் எனது செல்வாக்கு அதிகரித்துவிட்டதாக சொல்வது தவறு. எங்களிடம் மேலிட தலைவர்கள் ஆலோசனை கேட்பார்கள். ஆனால் இறுதி முடிவு எடுப்பது, மேலிடம் தான்.

    எங்கள் கட்சியில் எந்த அதிருப்தியும் இல்லை. மந்திரிசபை குறித்து தங்களுக்கு அதிருப்தி இருப்பதாக தேவே கவுடா மற்றும் மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறியது ஏன் என்று எனக்கு தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து இந்த மாதத்திற்குள் முடிவு எடுக்கப்படும்.



    எந்த தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள் என்பது பற்றியும் நாங்கள் ஆலோசிக்கவில்லை. சபரிமலை கோவிலில் பெண்கள் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை பா.ஜனதாவினர் மதிக்கவில்லை.

    ராமர்கோவில் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வரட்டும் என்று அக்கட்சியினர் சொல்கிறார்கள். ஆனால் சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அக்கட்சியினர் செயல்படுகிறார்கள். கோர்ட்டு மீது பா.ஜனதாவுக்கு நம்பிக்கை, மரியாதை இல்லை.

    ரபேல் போர் விமான கொள்முதல் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த பா.ஜனதா பயப்படுவது ஏன்?. ரமேஷ் ஜார்கிகோளி காங்கிரசை விட்டு விலக மாட்டார்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார். #BJP #Siddaramaiah
    Next Story
    ×