search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் மனித சுவர் போராட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.
    X
    பெண்கள் மனித சுவர் போராட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

    கேரளாவில் நடந்த மகளிர் சுவர் போராட்டம் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் - பினராயி விஜயன்

    கேரளாவில் 620 கி.மீ. நீளத்துக்கு நடந்த மகளிர் சுவர் போராட்டம் சாதனை புத்தகத்தில் இடம் பெறும் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார். #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் அனைத்து வயது பெண்கள் சாமி தரிசனத்திற்கு ஆதரவு திரட்ட மாநில அரசு சார்பில் பெண்கள் மனித சுவர் போராட்டம் நடத்தப்பட்டது.

    காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்த இந்த போராட்டத்தில் 35 லட்சம் பெண்கள் பங்கேற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாதி, மத வேறுபாடின்றி பெண்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    தொடக்க இடமான காசர்கோட்டில் கேரள சுகாதாரத்துறை மந்திரி சைலஜாவும், முடிவு இடமான திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மூத்த தலைவர்களில் ஒருவரான பிருந்தாகரத்தும் பங்கேற்றனர். ரீமா கல்லிங்கல் உள்பட நடிகைகள் பலரும் மனித சுவர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதுபற்றி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பெண்கள் உரிமைகளை பாதுகாக்க நடத்தப்பட்ட மனித சுவர் போராட்டத்தில் அதிக அளவு பெண்கள் திரண்டு இதை வெற்றி பெற செய்துள்ளனர். 620 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போராட்டம் பற்றி ஒரு மாதத்திற்கு முன்புதான் முடிவு செய்யப்பட்டது. அதை வெற்றிகரமாக நடத்தி உள்ளோம்.

    பெண்கள் முன்னேற்றத்திற்காக நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் பாகுபாடு இல்லாமல் பெண்கள் கலந்துகொண்டு இதை வெற்றி பெற செய்துள்ளனர். சட்டத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் சம உரிமை வழங்க வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த போராட்டம் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டமாக கருதுகிறோம்.

    பெண்களுக்கு எதிராக செயல்படும் பழமைவாதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கைதான் இது. பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். வழபாடுகளில் பாகுபாடு இருக்கக்கூடாது என்பது இதன் மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PinarayiVijayan



    Next Story
    ×