search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடுதல் அம்சங்களுடன் புதிய 20 ரூபாய் நோட்டுக்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி
    X

    கூடுதல் அம்சங்களுடன் புதிய 20 ரூபாய் நோட்டுக்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

    கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #NewBankNote #Rs20BankNote
    புதுடெல்லி:

    கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை எனக் கூறி, நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதியன்று அதிரடியாக அறிவித்தது. அத்துடன் இந்த ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்வதற்கு காலக்கெடு விதித்தது. புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

    அதன்பின்னர், 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய், 10 ரூபாய் என படிப்படியாக புதிய ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த ரூபாய் நோட்டுக்கள் பழைய ரூபாய் நோட்டுக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவங்களில், மாறுபட்ட அளவுகளில் வெளியிடப்பட்டன. அந்த வரிசையில் தற்போது கூடுதல் அம்சங்களுடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



    2016 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி மொத்தம் 4.92 பில்லியன் எண்ணிக்கையில் 20 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. மார்ச் 2018-ல் அது இரு மடங்காக உயர்ந்து, 10 பில்லியன் நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன. இது மொத்த கரன்சி எண்ணிக்கையில் 9.8 சதவீதம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

    பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் தவிர ஏற்கனவே நடைமுறையில் இருந்த மற்ற பழைய ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. #NewBankNote #Rs20BankNote

    Next Story
    ×