search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லோக்பால், லோக் ஆயுக்தாக்கள் நியமனத்தை வலியுறுத்தி ஜனவரி 30ம் தேதி அன்னா ஹசாரே போராட்டம்
    X

    லோக்பால், லோக் ஆயுக்தாக்கள் நியமனத்தை வலியுறுத்தி ஜனவரி 30ம் தேதி அன்னா ஹசாரே போராட்டம்

    லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாக்கள் நியமனத்தை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மகாராஷ்டிராவின் ரலேகானில் சித்தியில் ஜனவரி 30-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார். #AnnaHazare #Lokpal #LokAyuktha #Protest
    மும்பை:

    காந்தியவாதியும், சமூக ஆர்வலருமான அன்னா ஹசாரே லோக்பால் சட்டத்தை கொண்டு வரவும், லோக் ஆயுக்தாவை நியமிக்க வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறார்.

    இதற்கிடையே, லோக் ஆயுக்தாவை நியமிக்காவிட்டால் காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என அறிவித்தார்.

    மத்திய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதியாக மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன், அன்னா ஹசாரேவை சந்தித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து விளக்கியதை தொடர்ந்து, தனது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைத்தார்.

    அப்போது பேசிய அவர், இனியும் மத்திய அரசு தாமதம் செய்தால் காந்தி நினைவு நாளான ஜனவரி 30ம் தேதி போராட்டம் நடத்துவேன் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாக்கள் நியமனத்தை வலியுறுத்தி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே ஜனவரி 30-ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாக்கள் நியமனத்தை வலியுறுத்தி மகாராஷ்டிராவின் ராலேகான் சித்தியில் ஜனவரி 30-ம் தேதி போராட்டம் நடத்த உள்ளேன் என தெரிவித்துள்ளார். #AnnaHazare #Lokpal #LokAyuktha #Protest
    Next Story
    ×