search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிறிஸ்துமஸ் பண்டிகை- மாநிலங்களவைக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை
    X

    கிறிஸ்துமஸ் பண்டிகை- மாநிலங்களவைக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக மாநிலங்களவைக்கு ஏற்கனவே ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. #WinterSession #ChristmasHoliday
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் தவிர மற்ற நாட்கள் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாநிலங்களவைக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதனால் திங்கட்கிழமை கூட்டத் தொடர் முடிந்ததும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் எம்பிக்கள் பண்டிகை முடிந்த மறுநாளே டெல்லி திரும்ப வேண்டிய நிலை இருந்தது. எனவே, தொடர்ச்சியாக உறுப்பினர்களுக்கு விடுமுறை கிடைக்கும் வகையில் டிசம்பர் 24 மற்றும் டிசம்பர் 26 ஆகிய நாட்களையும் விடுமுறை நாளாக அறிவிக்கும்படி, அவைத்தலைவருக்கு பல்வேறு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். 

    இதனை ஏற்ற அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறை காலத்தை நீட்டித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாளான டிசம்பர் 24 (திங்கட்கிழமை), கிறிஸ்துமசுக்கு மறுநாளான டிசம்பர் 26 (புதன்கிழமை) ஆகிய இரண்டு நாட்களும் மாநிலங்களவைக்கு விடுமுறை விடப்படுவதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு இன்று அறிவித்தார். 

    இதன்மூலம் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் என தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. #WinterSession #ChristmasHoliday
    Next Story
    ×