search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - முதல்வராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்
    X

    ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி - முதல்வராக பதவி ஏற்றார் அசோக் கெலாட்

    ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் மந்திரியாக அசோக் கெலாட் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். துணை முதல் மந்திரியாக சச்சின் பைலட் பொறுப்பேற்றார். #AshokGehlot #RajasthanCM
    போபால்:

    ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பிடித்து வெற்றி பெற்றது.

    ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர். இறுதியில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.



    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் முதல் மந்திரியாக அசோக் கெலாட் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.  அவரை தொடர்ந்து துணை முதல் மந்திரியாக சச்சின் பைலட் மற்றும் இதர மந்திரிகளும் பொறுப்பேற்றனர்.

    ஜெய்ப்பூர் நகரில் உள்ள ஆல்பர்ட் அரங்கத்தில் இன்று காலை சுமார் 10 மணியளவில் நடைபெற்ற விழாவில் அம்மாநில கவர்னர் கல்யாண் சிங் பதவி பிரமாணமும், காப்புறுதி பிரமாணமும் செய்து வைத்தார்.

    இந்த பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவேகவுடா, ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா, காங்கிரஸ் தலைவர் ஜித்தின் பிரசாத், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். #AshokGehlot #RajasthanCM
    Next Story
    ×