search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூடு பிடிக்கிறது பாராளுமன்ற தேர்தல் களம் - சோனியா தொகுதியில் நாளை மோடி பிரசாரம்
    X

    சூடு பிடிக்கிறது பாராளுமன்ற தேர்தல் களம் - சோனியா தொகுதியில் நாளை மோடி பிரசாரம்

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் சோனியா காந்தியின் எம்.பி. தொகுதியான ரேபரேலியில் பிரதமர் மோடி நாளை தனது பிரசாரத்தை தொடங்குகிறார். #Modi #Congressstronghold #Modivisit #ModivisitRaeBareli
    லக்னோ:

    இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 பாராளுமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. எனவே, பாராளுமன்ற தேர்தலின்போது தனித்துவமாக கவனிக்கப்படும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக உத்தரபிரதேசம் இருந்து வருகிறது. இங்கு அதிக அளவிலான தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைத்து வருகிறது.

     கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில்உத்தரபிரதேசத்தில் மட்டும் பா.ஜ.க. 75 தொகுதிகளை கைப்பற்றியது. அவ்வகையில் அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும் அதிக தொகுதிகளில் வெற்றிபெற அக்கட்சியின் தலைமை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்  சோனியா காந்தியின் எம்.பி. தொகுதியான ரேபரேலியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தனது பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

    கோப்புப்படம்

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் ரேபரேலி நகருக்கு வரும் அவர், ரேபரேலி-பான்டா நான்குவழி நெடுஞ்சாலையை திறந்து வைப்பதுடன் 1100 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்

    ரேபரேலியில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் மோடி, அங்கிருந்து  பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகருக்கு சென்று கும்பமேளா விழாவுக்கான முன்னேற்பாடுகளை பார்வையிடுகிறார். இங்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பின்னர், இங்குள்ள ஜுன்சி பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார். இந்நிகழ்ச்சிகளில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கலந்து கொள்கிறார்.

    ரேபரேலி நகரில் மோடி உரையாற்றும் ரெயில் பெட்டி தொழிற்சாலை மைதானத்தில் நாளை சுமார் 3 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இப்பகுதியை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. #Modi #Congressstronghold #Modivisit #ModivisitRaeBareli 
    Next Story
    ×