search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டார்
    X

    ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டார்

    டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். #RajasthanElections2018 #Congress #RahulGandhi #AshokGehlot
    ஜெய்ப்பூர்:

    முதல் மந்திரி வசுந்தரா ராஜே தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வந்த ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

    வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர். இறுதியில் 199 தொகுதிகளில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. 

    காங்கிரசின் முக்கிய தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் தலைமையில் தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடுவும் எடுக்கப்படவில்லை.

    இதற்கிடையே, காங்கிரசின் முக்கிய தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகியோர் நேற்று டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இரவில் அவர்கள் ஜெய்ப்பூர் திரும்பினர்.



    இதையடுத்து, ராஜஸ்தானில் முதல் மந்திரியாக யாரை நியமித்தாலும் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர் ராஜஸ்தான் முதல் மந்திரியாக அசோக் கெலாட்டை தேர்வு செய்துள்ளனர்.

    மேலும் சச்சின் பைலட் துணை முதல் மந்திரியாகவும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராகவும் செயல்படுவார் என காங்கிரசார் தெரிவித்துள்ளனர். #RajasthanElections2018 #Congress #RahulGandhi #AshokGehlot #SachinPilot
    Next Story
    ×