search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தியின் தவறான பிரச்சாரம் அம்பலம் - உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அமித் ஷா கருத்து
    X

    ராகுல் காந்தியின் தவறான பிரச்சாரம் அம்பலம் - உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அமித் ஷா கருத்து

    ரபேல் விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தவறான பிரச்சாரம் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அம்பலமாகியிருப்பதாக பாஜக தலைவர் அமித் ஷா வலியுறுத்தினார். #RafaleCase #AmitShah #Rahulgandhi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு புகார்கள் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பினை பாஜக வரவேற்றுள்ளது. அத்துடன், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகளை கூறி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் இன்று பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தனர்.

    இந்த  தீர்ப்பு குறித்து பாஜக தலைவர் அமித் ஷா கூறுகையில், “ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் உண்மை வென்றுள்ளது. அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் மத்திய அரசுக்கு எதிராக பரப்பப்பட்ட தவறான பிரச்சாரத்தை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அம்பலப்படுத்தி உள்ளது.



    ரபேல் ஒப்பந்த நடைமுறைகளில் தவறு நடந்ததாகவோ, வணிக ஆதாயம் இருந்ததாகவோ நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் மக்களிடம் தவறான கருத்துக்களை தெரிவித்தமைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். ரபேல் ஒப்பந்தம் குறித்து தவறான தகவல்களை அவருக்கு அளித்தது யார் எனவும் ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும்” என வலியுறுத்தினார். #RafaleCase #AmitShah #Rahulgandhi
    Next Story
    ×