search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி, நம்பகத்தன்மையை நிலைநாட்டுவேன் - புதிய கவர்னர் பேட்டி
    X

    ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி, நம்பகத்தன்மையை நிலைநாட்டுவேன் - புதிய கவர்னர் பேட்டி

    ரிசர்வ் வங்கியின் நம்பகத்தன்மை மற்றும் தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட முயற்சிப்பேன் என புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். #ShaktikantaDas #RBIGovernor #RBIGovernorappointed
    மும்பை:

    மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் தொடர்ந்து மோதல் இருப்பதாக வெளியான தகவல்களுக்கு வலிமை சேர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார்.

    இதைதொடர்ந்து, மத்திய முன்னாள் நிதித்துறை செயலாளரும், மத்திய நிதிக்குழுவின் உறுப்பினருமான சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் 25-வது கவர்னராக நேற்று நியமிக்கப்பட்டார். வரும் மூன்றாண்டுகளுக்கு இந்த பதவியில் இவர் நீடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்று கொண்ட புதிய கவர்னர் சக்திகாந்த தாஸ் நிருபர்களுக்கு முதன்முறையாக பேட்டியளித்தார்.

    ரிசர்வ் வங்கி என்பது இந்த நாட்டின் மிகப்பெரிய அமைப்பாகும். நீண்ட செழுமையான வரலாறு கொண்ட இந்த அமைப்பின் தன்னாட்சி உரிமை, ஒருமைப்பாடு மற்றும் நம்பகத்தன்மையை நிலைநாட்ட நான் முயற்சிப்பேன் என்று அவர் குறிப்பிட்டார்.


    ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சகத்துக்கும் இடையில் இருந்ததாக கூறப்படும் மோதல்போக்கு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்த அவர், ‘எல்லா அமைப்புகளும் தங்களது தன்னாட்சி உரிமையை பேணி பாதுகாக்க வேண்டும். அதேவேளையில் பொறுப்புணர்வுடனும் நம்பகமாகவும் செயல்பட வேண்டும்.

    அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான நல்லுறவில் முட்டுக்கட்டை உருவாகியுள்ளதா? என்பது எனக்கு தெரியாது. ஆனால், ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் மத்திய குழு கூட்டம் திட்டமிட்டபடி டிசம்பர் 14-ம் தேதி நடைபெறும் என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். #ShaktikantaDas #RBIGovernor #RBIGovernorappointed 
    Next Story
    ×