search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது விவகாரம்- பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருகிறது அதிமுக
    X

    மேகதாது விவகாரம்- பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருகிறது அதிமுக

    மேகதாது விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி அதிமுக சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. #WinterSession #MekedatuIssue #AdjournmentMotion
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் தற்போதைய எம்பிக்கள், முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசியல் ஆதாயத்துக்காக அல்லாமல் நாட்டு மக்களின் நலனுக்காக இந்த கூட்டத்தொடரை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது. இந்த கூட்டத் தொடரில் ரிசர்வ் வங்கி விவகாரம், அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    ரிசர்வ் வங்கி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி. ரஞ்சீத் ரஞ்சன் மக்களவையில் இன்று நோட்டீஸ் கொடுத்துள்ளார்.



    இதேபோல் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி அதிமுக சார்பில் பாராளுமன்ற இரு அவைகளிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் அதிமுக எம்பி வேணுகோபால் கடிதம் கொடுத்துள்ளார். மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக, நவநீதகிருஷ்ணன் எம்பி நோட்டீஸ் கொடுத்துள்ளார். மேகதாது விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. #WinterSession #MekedatuIssue #AdjournmentMotion
    Next Story
    ×