search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரையிறுதியில் பா.ஜ.க. காணாமல் போனது - மம்தா கிண்டல்
    X

    அரையிறுதியில் பா.ஜ.க. காணாமல் போனது - மம்தா கிண்டல்

    5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து இன்று கருத்து தெரிவித்த மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, அரையிறுதியில் பா.ஜ.க. காணாமல் போனதாக குறிப்பிட்டுள்ளார். #Results2018 #Mamata #BJP
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளது, சத்தீஸ்கரில் பா.ஜ.க. ஆட்சியை பறி கொடுக்கிறது. மத்தியப்பிரதேசத்திலும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் இதர கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சிக்கான மக்களின் நற்சான்றிதழாக இந்த முடிவுகள் கருதப்படுகிறது. இந்நிலையில்,  எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான அரையிறுதி போட்டியாக கருதப்படும் இந்த தேர்தலில் பா.ஜ.க. காணாமல் போனதாக குறிப்பிட்டுள்ளார்.
     
    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், ‘மக்கள் பா.ஜ.க.வுக்கு எதிராக வாக்களித்துள்ளனர். இது மக்களின் தீர்ப்பு மட்டுமல்ல, இந்த நாட்டு மக்களின் வெற்றியும்கூட.


    இது அநீதிக்கு எதிரான ஜனநாயகத்தின் வெற்றி. அட்டூழியங்கள், ஜனநாயக அமைப்புகளை சிதைக்கும் பேரழிவு, அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிரான வெற்றி.

    விவசாயிகள், ஏழை மக்கள், இளைஞர்கள், தலித்துகள், சிறுபான்மையின மக்களுக்கான வெற்றியாக இதை பார்க்க வேண்டும். இந்த அரையிறுதி போட்டியில் எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க. காணாமல் போய்விட்டது.

    இறுதிப்போட்டியான 2019-பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி அமையும்? என்பதற்கான உண்மையான ஜனநாயக குறியீடாக இந்த முடிவுகள் வெளியாகி வருகிறது. குறிப்பாக, ஜனநாயகத்தில் மக்கள்தான் எப்போதுமே ‘ஆட்ட நாயகர்கள்’. வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகள்’ என மம்தா தெரிவித்துள்ளார். #Results2018 #Mamata #BJP
    Next Story
    ×