search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானாவில் ஆட்சியை தக்கவைக்கிறார் சந்திரசேகர ராவ்
    X

    தெலுங்கானாவில் ஆட்சியை தக்கவைக்கிறார் சந்திரசேகர ராவ்

    தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், சந்திரசேகர ராவின் டிஆர்எஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதால் ஆட்சியை தக்கவைக்க வாய்ப்பு உள்ளது. #Results2018 #TelenganaElections #ChandrasekharRao
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

    தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை, முதல்-மந்திரியாக இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பா.ஜனதா ஆகிய 3 அணிகளுக்கிடையே போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 1,821 வேட்பாளர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 43 மையங்களில் எண்ணப்பட்டு தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளன.



    காலை 10.30 மணி நிலவரப்படி சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி (டிஆர்எஸ்) 86 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது. முதல்வர் சந்திரசேகர  ராவ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் கூட்டணி 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. பாஜக 5 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்தது. ஆட்சி அமைக்க 60 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், அதைவிட அதிக தொகுதிகளில் டிஆர்எஸ் வெற்றியை நெருங்குகிறது. எனவே கட்சியினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

    இதேபோல் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. #Results2018 #TelenganaElections #ChandrasekharRao

    Next Story
    ×