search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் தீர்ப்புக்கு சி.பி.ஐ. வரவேற்பு
    X

    விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் தீர்ப்புக்கு சி.பி.ஐ. வரவேற்பு

    தலைமறைவு குற்றவாளியாக பிரிட்டனில் பதுங்கி இருந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு லண்டன் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு சி.பி.ஐ. வரவேற்பு தெரிவித்துள்ளது. #CBI #VijayMallya #VijayMallyaextradition
    புதுடெல்லி:

    இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச்சென்ற விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. 

    இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த வெஸ்ட்மின்ஸ்ட்டர் மாஜிஸ்திரேட் கோர்ட் நீதிபதி எம்மா அர்புத்னாட், மோசடி, சதி திட்டம் மற்றும் கள்ளத்தனமான பணப் பரிமாற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டதாக மல்லையாவுக்கு எதிரான நம்பகமான முகாந்திரங்கள் இருப்பதால் அவரை நாடு கடத்தலாம் என உத்தரவு பிறப்பித்தார்.

    பிரிட்டன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பரிந்துரைக்காக இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ள நிலையில், லண்டன் கோர்ட் அளித்த இந்த தீர்ப்புக்கு விஜய் மல்லையாவுக்கு எதிரான இந்த நடவடிக்கையை எடுத்த சி.பி.ஐ. வரவேற்பு தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர், ‘சி.பி.ஐ.க்கு என்று தனிப்பட்ட வலிமை உள்ளது. இந்த வழக்கில் நாங்கள் மிக கடுமையாக பணியாற்றினோம்.

    அவர் நிச்சயமாக நாடு கடத்தப்படவார் என நாங்கள் நம்பினோம். மல்லையாவை விரைவாக இந்தியாவுக்கு கொண்டு வந்து அவர் மீதான வழக்கை முடிக்க விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லையா பிரிட்டனில் உள்ள வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடர வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.  #CBI #VijayMallya #VijayMallyaextradition
    Next Story
    ×