search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் விவாதிக்க தயார் - மோடி
    X

    அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் விவாதிக்க தயார் - மோடி

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க அரசு தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #Governmentready #Parliamentallpartymeet
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்துக்கு பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி நரேந்திர சிங் டோமர் அழைப்பு விடுத்திருந்தார்.

    இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி அருண் ஜெட்லி, காங்கிரஸ் தரப்பில் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, மல்லிகார்ஜுனா கார்கே, சமாஜ்வாதி சார்பொல் ராம் கோபால் யாதவ், சி.பி.ஐ. சார்பில் டி.ராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தின்போது அனைத்து கட்சி தலைவர்களும் முன்வைத்த கருத்துகளை கேட்ட பிரதமர் மோடி, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இடையூறின்றி சுமுகமாக நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என வலியுறுத்தினார்.



    மேலும், பொதுநன்மை சார்ந்த அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் விவாதிக்க இந்த அரசு தயாராக உள்ளதாகவும் மோடி குறிப்பிட்டதாக இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற விவகாரங்கள்துறை மந்திரி நரேந்திர சிங் டோமர் தெரிவித்தார்.

    எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தில் மீண்டும் ரபேல் போர் விமான ஊழல் மற்றும் ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமை தொடர்பான பிரச்சனைகளை முன்வைக்க காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக ராஜ்யசபை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் குறிப்பிட்டார். #Governmentready #Parliamentallpartymeet
    Next Story
    ×