search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடன் தொல்லையால் மகனை கொன்று தம்பதி தற்கொலை
    X

    கடன் தொல்லையால் மகனை கொன்று தம்பதி தற்கொலை

    திருமலை அருகே கடன் தொல்லையால் 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருமலை:

    ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் தாதி செர்லா கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தம்(39), இவரது மனைவி பத்மாவதி (32). இவர்களுக்கு மகேஷ் குமார் (11) திரிஷா (6) என்ற மகன், மகள் உள்ளனர்.

    புருஷோத்தம் திருப்பதியில் உள்ள பி.டி.ஆர் காலனியில் தங்கியிருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு தயாரிக்கும் கூடத்தில் ஒப்பந்த ஊழியராக கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார்.

    அவர் பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். பணத்தை திருப்பி தராததால் கடன் கொடுத்தவர்கள் புருஷோத்தம் வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்து, கொடுத்த கடனை திருப்பி கேட்டனர்.

    இதனால் மனமுடைந்த புருஷோத்தம் வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணினார். தன்னுடைய மகன், மகளை தூக்கில் தொங்கவிட்டு கணவனும், மனைவியும் தூக்கில் தொங்கியுள்ளனர். அப்போது திரிஷா வலியால் கூச்சலிட்டார்.

    திரிஷாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து வீட்டினுள் ஓடிவந்தனர். அப்போது அங்கு 4 பேரும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தூக்கில் தொங்கியவர்களை மீட்டனர்.

    ஆனால் புருஷோத்தம், அவரது மனைவி பத்மாவதி, மகன் மனோஜ்குமார் ஆகியோர் இறந்துவிட்டனர். திரிஷா மட்டும் உயிர் தப்பினார். அவரை மீட்டு ரூயா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து, தகவல் அறிந்த திருப்பதி எஸ்.பி. அன்புராஜன், திருப்பதி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து திருப்பதி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×