search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்த முறையும் ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி
    X

    இந்த முறையும் ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி

    ரெப்போ விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. எனவே ரெப்போ விகிதம் 6.50 சதவீதமாக நீடிக்கும். #RBI #RBIPolicy #RBIMonetaryPolicy #RepoRate
    புதுடெல்லி:

    இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடத்தப்பட்டு, வட்டி விகிதம் மற்றும் நிதிக்கொள்கை முடிவுகள் வெளியிடப்படும். ஆகஸ்ட் மாதம் நடந்த கூட்டத்தில் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) 0.25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 சதவீதமாகவும் உயர்ந்தது. அதன்பின்னர் அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் இன்று நிதிக்கொள்கை குழு இன்று மீண்டும் கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று பிற்பகல் நிறைவடைந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு தனது கொள்கை முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே ரெப்போ 6.50 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ 6.25 சதவீதமாகவும் நீடிக்கும். இதன்மூலம் இரண்டு முறை அடுத்தடுத்து வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

    இதேபோல் 2019ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7,4 ஆக இருக்கும் என்றும், 2019-20ம் ஆண்டின் முதல் அரையாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.5 ஆக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டில் பணவீக்கம் 2.7-3.2 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.  #RBI #RBIPolicy #RBIMonetaryPolicy #RepoRate
    Next Story
    ×