search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் - மத்திய மந்திரி உமா பாரதி அறிவிப்பு
    X

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் - மத்திய மந்திரி உமா பாரதி அறிவிப்பு

    சுஷ்மா சுவராஜை தொடர்ந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மத்திய மந்திரி உமா பாரதி இன்று அறிவித்துள்ளார். #LokSabhaelections #UmaBharti
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 6 மாதங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் அறிவித்தார். எனினும், இதுதொடர்பாக பா.ஜ.க. தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், சுஷ்மா சுவராஜை தொடர்ந்து, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யும் மத்திய குடிநீர், வடிகால்துறை மந்திரியுமான உமா பாரதி ’எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்’ என இன்று அறிவித்துள்ளார்.



    ராமர் கோவில் கட்டுவது, கங்கை நதியை தூய்மைப்படுத்துவது ஆகிய நோக்கங்களை மையப்படுத்தி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் சுமார் ஒன்றரை ஆண்டு காலம் 2500 கிலோமீட்டர் நடைப்பயண பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பதவியில் நான் இருக்க மாட்டேன். ஆனால், இதற்காக நான் அரசியல் துறவறம் மேற்கொள்வதாக நினைக்க வேண்டாம். வழக்கம்போல் கட்சி பிரசாரங்களில் நான் பங்கேற்பேன் என்றும் உமா பாரதி தெரிவித்தார். #LokSabhaelections #UmaBharti
    Next Story
    ×