search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கர்த்தார்பூரை காங்கிரஸ் ஆட்சி பாகிஸ்தானுக்கு தாரைவார்த்து கொடுத்தது - மோடி குற்றச்சாட்டு
    X

    கர்த்தார்பூரை காங்கிரஸ் ஆட்சி பாகிஸ்தானுக்கு தாரைவார்த்து கொடுத்தது - மோடி குற்றச்சாட்டு

    தொலைநோக்கு சிந்தனை இல்லாத காங்கிரசாரின் நடவடிக்கையால் பாகிஸ்தானில் சீக்கிய கோவில் அமைந்திருக்கும் கர்த்தார்பூர் பகுதியை நாம் இழந்து விட்டோம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு வரும் 7-ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இங்குள்ள பல மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம் செய்து பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

    ஹனுமன்கர் பகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, தொலைநோக்கு சிந்தனை இல்லாத காங்கிரசாரின் நடவடிக்கையால் பாகிஸ்தானில் சீக்கிய கோவில் அமைந்திருக்கும் கர்த்தார்பூர் பகுதியை நாம் இழந்து விட்டோம் என தெரிவித்தார். குருநானக் தேவுக்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கவில்லை, சீக்கிய மதத்தினரின் உணர்வுகளுக்கும் அவர்கள் மதிப்பளிக்கவில்லை.

    அதனால், 70 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் செய்த இந்த தவறுக்கு தற்போது புதிய பாதையை அமைத்து நான் பரிகாரம் தேட வேண்டியுள்ளது. 70 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு இதை ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை உங்கள் தீர்ப்புக்கே நான் விட்டு விடுகிறேன்.

    ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்திகளாக எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல் என்ற செய்திகள்தான் வந்து கொண்டிருந்தன. இப்போது கடந்த ஐந்தாண்டுகளாக இதுபோன்ற செய்திகளை நீங்கள் பார்த்ததுண்டா?

    காற்றாலை மின்சாரம், சூரியசக்தி மின்சாரம் மற்றும் சொட்டுநீர் பாசனத்தின் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என எங்கள் அரசு நினைக்கிறது. ஆனால், பச்சை மிளகாய்க்கும் காய்ந்த மிளகாய்க்கும் வித்தியாசம் தெரியாதவர் ராகுல் காந்தி.



    காய்ந்த மிளகாய்க்கு நல்ல விலை கிடைக்கிறது என்றால், பின்னர் ஏன் விவசாயிகள் பச்சை மிளகாயை
    பயிரிட வேண்டும். காய்ந்த மிளகாயையே பயிரிட வேண்டியதுதானே? என்று அவர் கேட்பார் என்றும் மோடி குறிப்பிட்டார். #Kartarpur #Modi 
    Next Story
    ×