search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி கேரள அரசு மனு
    X

    சபரிமலை தொடர்பான வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி கேரள அரசு மனு

    சபரிமலை தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என கேரள அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. #SabarimalaCase #KeralaHighCourt #SupremeCourt
    புதுடெல்லி:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி பல்வேறு அமைப்பினர் தாக்கல் செய்துள்ள மறு ஆய்வு மனுக்கள் அடுத்த மாதம் (ஜனவரி) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகின்றன.



    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சபரிமலை மட்டுமின்றி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றதால் சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டனர்.

    இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக கேரள ஐகோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இவற்றை விசாரித்து வரும் ஐகோர்ட்டு மாநில அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

    இந்த நிலையில் சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு ஆய்வு மனுக்களுடன் விசாரிக்கும் வகையில், கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என கேரள அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. #SabarimalaCase #KeralaGovernment #SupremeCourt 
    Next Story
    ×