search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதங்களின் பெயரால் இடஒதுக்கீட்டை பாஜக எதிர்க்கும் - அமித் ஷா பேச்சு
    X

    மதங்களின் பெயரால் இடஒதுக்கீட்டை பாஜக எதிர்க்கும் - அமித் ஷா பேச்சு

    தெலுங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, மதங்களின் பெயரால் கொண்டு வரப்படும் இடஒதுக்கீட்டை பாஜக எதிர்க்கும் என தெரிவித்தார். #TelanganaAssemblyElections #AmitShah
    ஐதராபாத்: 

    119 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.  

    சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. கலைக்கப்பட்ட சட்டசபையில் 5 உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க. இந்த தேர்தலில் தனித்து களமிறங்கியுள்ளது. 

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. 



    இந்நிலையில், தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    சமீபத்தில் மகாராஷ்டிராவில் பாஜக சார்பில் முதல் மந்திரியாக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் நகர்ப்புற நக்சலைட்களை கைது செய்தனர். ஆனால், தெலுங்கானா மாநிலத்தில் நகர்ப்புற நக்சலைட்களுக்கு காங்கிரஸ் கட்சி  ஆதரவு அளித்து வருகிறது. தெலுங்கானாவில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதை ராகுல் அறிவாரா?

    தெலுங்கானாவில் உள்ள மாவோயிஸ்ட்களுக்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று அவர்கள் மக்களுடன் சேர்ந்து வாழவேண்டும். இல்லையேல் சிறைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.

    தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் அல்லது காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் சரி, அவர்கள் மதங்களின் பெயரால் கொண்டு வரும் இடஒதுக்கீட்டை மத்தியில் உள்ள பாஜக அரசு நிச்சயம் எதிர்க்கும் என தெரிவித்தார். #TelanganaAssemblyElections #AmitShah
    Next Story
    ×