search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எனக்கு ஓட்டு போடாவிட்டால் தூக்கில் தொங்குவேன் - பா.ஜனதா வேட்பாளர் மிரட்டல்
    X

    எனக்கு ஓட்டு போடாவிட்டால் தூக்கில் தொங்குவேன் - பா.ஜனதா வேட்பாளர் மிரட்டல்

    தனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்வேன் என்று கூறி பா.ஜனதா வேட்பாளர் வாக்கு சேகரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #RajasthanElection #BJP
    ஜெய்ப்பூர்:

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு பா.ஜனதா ஆட்சியை தக்க வைக்கவும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றவும் கடுமையாக போராடி வருகிறது.



    பா.ஜனதா மந்திரியான ஸ்ரீசந்த் கிருபலானிக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் நிம்பஹாரா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசும்போது மக்கள் எனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்கில் தொங்குவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். சித்தோ கட் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் திருப்பலானி பேசும் போது நீங்கள் எனக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்யவேண்டும். அப்படி எனக்கு வாக்களிக்காவிட்டால் தூக்குபோட்டு தற்கொலை செய்வேன். என்று பேசினார்.

    அவரது இந்த பிரசார யுக்தி வாக்காளர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதே போல தெலுங்கானாவில் வேட்பாளர் ஒருவர் வித்தியாசமாக வாக்கு சேகரித்தார். சுகுலா ஹனுமந்த் என்பவர் கொருட்லா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    அவர் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கும்போது ஒரு ஜோடி செருப்பையும் கொடுக்கிறார்.

    எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் பொது இடத்தில் வைத்து இந்த செருப்பால் அடிக்குமாறு கூறி வாக்கு சேகரிக்கிறார். #RajasthanElection #BJP
    Next Story
    ×