search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவம்பர் 22-ம் தேதி நடைபெறவிருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு
    X

    நவம்பர் 22-ம் தேதி நடைபெறவிருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு

    மோடியின் அரசை வீழ்த்த நவம்பர் 22-ம் தேதி நடைபெறவிருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜியை சந்தித்த பின்னர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். #Oppositionconclave #Oppositionconclavepostponed #ChandrababuNaidu
    கொல்கத்தா:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று கூறி பா.ஜனதா கூட்டணியில் இருந்து ஆந்திர முதல்-மந்திரியும், தெலுங்குதேச தலைவருமான சந்திரபாபு நாயுடு விலகினார்.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார்.

    அதன்படி அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சந்தித்தார்.

    அதை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு கடந்த 8-ந்தேதி முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடக முதல்- மந்திரி குமாரசாமி ஆகியோரையும், 9-ந்தேதி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்தார்.

    அவர் ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், சரத்யாதவ் ஆகியோரையும் சந்தித்து இருந்தார்.

    பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் வருகிற 22-ந்தேதி நடக்கிறது. டெல்லி ஆந்திர பவனில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்து இருந்தார்.

    இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுப்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக சந்திரபாபு நாயுடு இன்று மாலை கொல்கத்தா வந்தார்.

    மம்தா பானர்ஜியுடன் சுமார் ஒருமணி நேரம் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, மோடியின் அரசை வீழ்த்த நவம்பர் 22-ம் தேதி நடைபெறவிருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இந்த கூட்டம் நடைபெறும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Oppositionconclave #Oppositionconclavepostponed #ChandrababuNaidu
    Next Story
    ×