search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஷ்கரில் 2-வது கட்ட தேர்தல்- 70 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
    X

    சத்தீஷ்கரில் 2-வது கட்ட தேர்தல்- 70 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்துக்கு முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. #Chhattisgarh #AssemblyElections
    ராய்ப்பூர்:

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக கடந்த 12-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் சுமார் 76.28 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.



    2-வது கட்டமாக மீதியுள்ள 72 தொகுதிகளுக்கு நாளை (20-ந்தேதி) வாக்குபதிவு நடக்கிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    2-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

    பா.ஜனதா சார்பில் பிரதமர் நரேந்திரமோடி, மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், முதல் - மந்திரி ராம்நாத்சிங் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதே போல காங்கிரஸ் தலைவர்களும் தீவிர பிரசாரம் செய்தனர்.

    நாளை வாக்குபதிவு நடைபெறும் 72 தொகுதிகளில் மொத்தம் 1,101 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 18 மாவட்டங்களில் தேர்தல் நடக்கிறது. இதில் தாம்தரி, சரியாபாத் ஸ்பூர், பில்ராம்பூர், மக சம்ண்ட், தபிர்தம் ஆகிய மாவட்டங்கள் நக்சலைட்டுகள் நிறைந்த பகுதியாகும். அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    சத்தீஷ்கர் மாநிலத்தில் பா.ஜனதா தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சியை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. காங்கிரஸ் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் வேட்கையில் உள்ளது.

    இதேபோல முன்னாள் முதல் மந்திரி அஜித் ஜோகி- மாயாவதி கூட்டணியும் களத்தில் இருக்கிறது. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆனாலும் காங்கிரசுக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. #Chhattisgarh #AssemblyElections
    Next Story
    ×