search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரபாபு நாயுடுவின் சந்தர்ப்பவாத கூட்டணி வெற்றிபெறாது- நடிகை ரோஜா பேட்டி
    X

    சந்திரபாபு நாயுடுவின் சந்தர்ப்பவாத கூட்டணி வெற்றிபெறாது- நடிகை ரோஜா பேட்டி

    காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட சந்திரபாபு நாயுடு சந்தர்ப்பவாதியாக செயல்படுகிறார். அந்த கூட்டணி வெற்றி பெறாது என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.#actressroja #ChandrababuNaidus #congress

    திருமலை:

    நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும் நடிகையுமான ரோஜா தனது பிறந்த நாளை நகரியில் கொண்டாடினார்.

    ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்த ரோஜாவை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் வரவேற்று மாலை அணிவித்தனர். ரோஜா தொண்டர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நகரி சென்றடைந்த ரோஜா ஒய்.எஸ்.ஆர். கேண்டின் என்ற நடமாடும் உணவகத்தை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த உணவகத்தில் ஏழை எளிய மக்களுக்கு சிறந்த உணவு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓரிடத்தில் இல்லாது உழைக்கும் வர்க்கம் இருக்கும் இடங்களுக்கு செல்லும் வகையில் நடமாடும் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட சந்திரபாபு நாயுடு சந்தர்ப்பவாதியாக செயல்படுகிறார். வரும் தேர்தலில் அவர் அமைக்கும் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்காது. தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு பிறந்த நாள் கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.  #actressroja #ChandrababuNaidus #congress

    Next Story
    ×