search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜஸ்தான் தேர்தல் - வசுந்தரா ராஜே சிந்தியாவை எதிர்த்து ஜஸ்வந்த் சிங் மகன் போட்டி
    X

    ராஜஸ்தான் தேர்தல் - வசுந்தரா ராஜே சிந்தியாவை எதிர்த்து ஜஸ்வந்த் சிங் மகன் போட்டி

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவை எதிர்த்து மத்திய முன்னாள் மந்திரி ஜஸ்வந்த் சிங் மகன் மன்வேந்திரா சிங் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். #JaswantSingh #VasundharaRaje #ManvendraSingh #Rajasthanpolls
    ஜெய்ப்பூர்:

    200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடும் 184 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட இரு பட்டியல்களாக அக்கட்சியின் தலைமை வெளியிட்டுள்ளது.

    இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள முன்னாள் முதல் மந்திரி அசோக் கேலாட், சர்தார்பூர் தொகுதியிலும், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், டோங்க் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

    இதேபோல், பா.ஜ.க.வும் மூன்று பட்டியல்களின் மூலம் தங்கள் கட்சியை சேர்ந்த 170 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.

    அம்மாநில முதல் மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா ஜல்ராபட்டான் தொகுதியில் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மந்திரி ஜஸ்வந்த் சிங் மகன் மன்வேந்திரா சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.



    தற்போது பார்மர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துவரும் மன்வேந்திரா சிங்குக்கு மீண்டும் சீட் வழங்கப்படாததால் அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இந்நிலையில், வசுந்தரா ராஜே சிந்தியாவை எதிர்த்து ஜல்ராபட்டான் தொகுதியில் மோதும் வாய்ப்பு இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #JaswantSingh #VasundharaRaje #ManvendraSingh #Rajasthanpolls
    Next Story
    ×