search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேரு குடும்பத்தை சேராதவர்களுக்கு தலைவர் பதவி கொடுப்பீர்களா? - காங்கிரசுக்கு மோடி கேள்வி
    X

    நேரு குடும்பத்தை சேராதவர்களுக்கு தலைவர் பதவி கொடுப்பீர்களா? - காங்கிரசுக்கு மோடி கேள்வி

    கட்சி தலைவர் பதவியை நேரு குடும்பத்தை சேராதவர்களுக்கு தருவீர்களா? என ம.பி.யில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி காங்கிரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். #MadhyaPradeshAssemblyElections #Modi #NehruFamily
    போபால்:

    230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேர்தல் நடைபெறுகிறது. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க. சார்பில் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதற்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 12 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு வேட்டை சூடுபிடித்துள்ளது.

    இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இம்மாநிலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகளில் இன்று சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசார பொதுக்கூட்டங்களில் பேசுகின்றனர்.

    பிரதமர் மோடி இன்று தனது முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். குவாலியர் மாவட்டத்தின் அம்பிகாபூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு என்ன செய்துள்ளது என்பதை அவர்கள் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    செங்கோட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தொடர்ந்து உரையாற்றி வருவதை மக்கள் கவனித்து வருகின்றனர்.

    மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை அடல்ஜி உருவாக்கினார். அந்த இரண்டு மாநிலங்களும் வளர்ச்சியும் அமைதியும் நிலவி வருகின்றன. ஆனால் காங்கிரஸ் உருவாக்கிய தெலுங்கானா மாநிலத்தின் நிலைமை என்ன? கடந்த நான்கரை ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    டீ விற்றவர் எப்படி பிரதமராக முடிந்தது என காங்கிரசார் அழுது புலம்பி வருகின்றனர். நேரு குடும்பத்தை சேராதவர்களுக்கு கட்சியின் தலைவர் பதவி கொடுத்துள்ளீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். #MadhyaPradeshAssemblyElections #Modi #NehruFamily
    Next Story
    ×