search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களை கட்டுகிறது ம.பி.தேர்தல் - மோடி,ராகுல்,அமித் ஷா இன்று போட்டி பிரசாரம்
    X

    களை கட்டுகிறது ம.பி.தேர்தல் - மோடி,ராகுல்,அமித் ஷா இன்று போட்டி பிரசாரம்

    மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று சூறாவளி பிரசாரம் செய்கின்றனர். #Modicampaign #AmitShahcampaign #RahulGandhicampaign
    போபால்:

    230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேர்தல் நடைபெறுகிறது.  முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க. சார்பில் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதற்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 12 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு வேட்டை சூடுபிடித்துள்ளது.


    இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இம்மாநிலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகளில்  இன்று சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசார பொதுக்கூட்டங்களில் பேசுகின்றனர்.

    நேற்று பட்நகர், ஷாஜாபூர், பார்வானி மாவட்டங்களில் நடந்த பிரசார கூட்டங்களில் பேசிய பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, ஷாடோல் டாமோஹ், சாகர், டிக்காமார்ஹ், கஜுராஹோ ஆகிய மாவட்டங்களில்  இன்று பேசவுள்ளார்.

    இன்று தனது முதல்கட்ட பிரசாரத்தை தொடங்கும் பிரதமர் நரேந்திர மோடி ஷாடோல், குவாலியர் மாவட்டங்களில் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து உரையாற்றுகிறார். இரண்டாவது கட்டமாக வரும் 18,20,25 தேதிகளிலும் பல மாவட்டங்களில் அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார்.

    இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று சாகர் மாவட்டத்தில் உள்ள டேவ்ரி பகுதியில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். பின்னர், சிவ்னி, மன்டாலா, ஷாடோல் மற்றும் பன்டேல்கன்ட் பகுதியில் நடைபெறும் கூட்டங்களில் பிரசார உரையாற்றுகிறார். #Modicampaign #AmitShahcampaign #RahulGandhicampaign #MPassemblyelections  #MPaelectionscampaign
    Next Story
    ×