search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிசாட் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்
    X

    ஜிசாட் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட்

    ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோ தயாரித்துள்ள ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் ஜிசாட் செயற்கைக்கோளுடன் இன்று மாலை வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. #GSLVMark3D2 #ISRO
    ஸ்ரீஹரிகோட்டா:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) உயர்தொழில்நுட்பத்தில் ஜிசாட்-29 என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இந்த செயற்கைகோள் இன்று மாலை 5.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3-டி2 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

    ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் 67-வது ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 -டி2 ஆகும். தகவல் தொடர்புக்காக இஸ்ரோ தயாரித்த 33-வது செயற்கைக்கோள் ஜிசாட்-29 இதில் பொருத்தப்பட்டு உள்ளது. 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் 33-வது ராக்கெட் மற்றும் இந்த ஆண்டு ஏவப்படும் 5-வது ராக்கெட் இதுவாகும்.


    ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் திட எரிபொருள், திரவ எரிபொருள் மற்றும் கிரையோஜெனிக் என்ஜின் ஆகிய 3 நிலைகளை கொண்ட ராக்கெட்டாகும்.  இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியதன் மூலம் இஸ்ரோ அடுத்த சாதனைக்கு தயாராகி வருகிறது.

    கனரக வகையை சேர்ந்த இந்த ராக்கெட் மூலம் சுமார் 10 டன் எடை கொண்ட பொருளை எளிதாக விண்ணுக்கு தூக்கிச் செல்ல முடியும். ஜிசாட்-29 செயற்கைக்கோள் 3 ஆயிரத்து 423 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்புத்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். #GSLVMark3D2 #ISRO 
    Next Story
    ×