search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு
    X

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC

    புதுடெல்லி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை சில மகளிர் அமைப்புகள் வரவேற்றன. ஆனால் அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் கடுமையாக எதிர்த்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த மனுக்களை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஜனவரி 22-ந்தேதி விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று அறிவித்தது. அதே சமயம் பெண்கள் வழிபாடு நடத்த அனுமதி அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.

     


    நவம்பர் 16-ந்தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட உள்ளதால் இந்த வழக்குகளை அவசரமாக விசாரிக்க கோரி வக்கீல் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று விசாரித்தது.

    சபரிமலை தொடர்பான வழக்கை ஜனவரி 22-ந்தேதி விசாரிப்பதாக ஏற்கனவே கூறி விட்டோம். அப்போது மட்டும்தான் விசாரிக்க முடியும். அதற்கு முன் இது தொடர்பாக எந்த மனுவையும் விசாரிக்கவோ, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவோ முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. #SabarimalaVerdict #SabarimalaReviewPetitions #SC

    Next Story
    ×