search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெலுங்கானா சட்டசபை தேர்தல் - முதல்கட்டமாக 65 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
    X

    தெலுங்கானா சட்டசபை தேர்தல் - முதல்கட்டமாக 65 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

    தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 65 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது. #TelanganaAssemblyElections #Congress
    ஐதராபாத்:

    119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள டி.ஆர்.எஸ். கட்சி போராடி வருகிறது.

    காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதேபோல் பாஜகவும் களத்தில் இருக்கிறது.

    தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் தெலுங்கானாவில் சோனியா காந்தி பிரசாரம் செய்கிறார். வருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் பிரசாரம் செய்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.



    இந்நிலையில், தெலுங்கானா சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள 65 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டுள்ளது.

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ஹுசூர் நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது மனைவி பத்மாவதி மீண்டும் கோகட் தொகுதியில் போட்டியிடுகிறார். 

    சர்வே சத்யநாராயண எம்.பி செகந்திராபாத் கண்டோன்மெண்ட் தொகுதியிலும், பூனம் பிரபாகர் கரீம் நகரிலும், பல்ராம் நாயக் மெகபூபாபாத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். #TelanganaAssemblyElections #Congress 
    Next Story
    ×