search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கரில் இன்று மேலும் இரு நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
    X

    சத்தீஸ்கரில் இன்று மேலும் இரு நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று முதல்கட்ட தேர்தல் நடந்த சுக்மா மாவட்டத்தில் 7 நக்சலைட்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். #Naxalsgunneddown #NaxalsinChhattisgarh #NaxalsinSukma
    ராய்ப்பூர்:

    90 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் உள்ளிட்ட 18 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. 

    தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவோயிஸ்டுகள் மிரட்டி உள்ளதால், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 
     
    இந்த பாதுகாப்பையும் மீறி தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் இன்று காலை வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இன்று பிற்பகல் பிஜப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பாமெட் பகுதியில் நக்சலைட்களுக்கும் ‘கோப்ரா’ எனப்படும் நக்சல் ஒழிப்பு பாதுகாப்பு படையினருக்கும் இடையில்  பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 நக்சலைட்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

    இதேபோல், தேர்தலை சந்தித்த சுக்மா மாவட்டத்தில் உள்ள முட்வால் கிராமத்தையொட்டியுள்ள வனப்பகுதியில் இன்று மாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் மேலும் இரு நக்சலைட்களை ஆயுதப் படையினர் சுட்டுக் கொன்றனர். 

    இரு நக்சலைட்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடன் இருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என சுக்மா மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அபிஷேக் மீனா தெரிவித்தார். #Naxalsgunneddown #NaxalsinChhattisgarh #NaxalsinSukma 
    Next Story
    ×