search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தீஸ்கரில் தேர்தல் அதிகாரிகளை குறிவைத்து மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்
    X

    சத்தீஸ்கரில் தேர்தல் அதிகாரிகளை குறிவைத்து மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல்

    சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் அதிகாரிகளை குறிவைத்து மாவோயிஸ்டுகள் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். #ChhattisgarhElections #DantewadaBlast #NaxalsAttack
    ராய்ப்பூர்:

    90 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் உள்ளிட்ட 18 தொகுதிகளில் இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என மாவேயிஸ்டுகள் மிரட்டி உள்ளதால், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த பாதுகாப்பையும் மீறி தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர்.  தேர்தல் பணிக்காக இன்று அதிகாலையில் தேர்தல் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சென்றபோது துமக்பால்-நயனார் சாலையில் குண்டு வெடித்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதிகாரிகள் பாதுகாப்பாக தங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று சேர்ந்தனர்.


    முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் முதல்வர் ராமன் சிங், மந்திரிகள் கேதர் காஷ்யப், மகேஷ் காக்தா, பாஜக எம்பி விக்ரம் உசேந்தி, காங்கிரஸ் கட்சியின் நடப்பு எம்எல்ஏக்கள் போன்ற முன்னிணி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 10 மணி நிலவரப்படி 10.7 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    இதற்கிடையே, சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில், அதிக அளவிலான வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். #ChhattisgarhElections #DantewadaBlast #NaxalsAttack
    Next Story
    ×